/indian-express-tamil/media/media_files/2025/05/23/CRIq5IgaySmmdIZqoS18.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-155712-782089.png)
"Hidden Falls" என சமூக ஊடகங்களில் வைரலான இந்த அருவி, இயற்கை அற்புதம் என பலராலும் போற்றப்பட்டு வந்தது. இப்போது, அரசு தரப்பில் அது சுற்றுலா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-155654-795626.png)
பெப்பர் அருவிக்கு செல்லும் பாதை இயற்கை பரப்பில் சமதளமற்று உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதிகம் 4 வீல் ஜீப் சேவைகளை நாடுகிறார்கள். இந்த வழித்தடம் பயணிகளுக்கு Trekking அனுபவத்தை தருவதோடு, அந்தப் பகுதியில் வாழும் ஜீப் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-155606-510990.png)
மாவட்ட நிர்வாகம் இந்த அம்சத்தையும் கணக்கில் எடுத்தே சுற்றுலாதலமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பின் அடிப்படையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிவறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, காவல் மற்றும் சுகாதார துறைகளின் உதவியுடன் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-155810-227393.png)
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலின் புதுமுக அருவியாக திகழும் பெப்பர் அருவி, தற்போது சுற்றுலா வட்டாரங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-155823-357692.png)
இந்த அருவி சுற்றுலா தலமாக அரசு அறிவித்த பிறகு நுழைவுக்கட்டணம் ரூ.100 என்று முடிவு செய்து புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.