/indian-express-tamil/media/media_files/2025/03/27/2wOpWL1bDIQWgzLDWqTm.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182057-924711.png)
பெண்களுக்கு பிரண்டை மிகவும் சத்தான உணவாகும்.. பிரண்டையிலிருந்து 6 ஸ்பூன் சாறு எடுத்து, அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஒரு வார காலம் சாப்பிடுவதால், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.. பிரண்டையில் வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் என ஏகப்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது.. அந்தவகையில், செரிமானம், வயிறு கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது இந்த பிரண்டை.. கல்லீரல் சேதத்தை தடுத்து நிறுத்தி, குடற் புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182015-312426.png)
துவையல் சாப்பிடும்போது, கெட்ட கொழுப்புகளை குறையும்.. ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு நீங்கும். இதனால் உடல் எடையும் குறையும்.. ரத்த அழுத்த நோயால் அவதிப்படுபவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு பிரண்டை.. மூச்சுத்திணறல் இருந்தால் பிரண்டையின் தண்டு, மிளகு சமஅளவு சேர்த்து துவையல் அரைத்து தினமும் 2 வேளை சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182131-309046.png)
எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை சரிசெய்யக்கூடியது பிரண்டை.. உடைந்த மற்றும் முறிந்த எலும்புகளை புதிய திசுக்களை உருவாக்கியே, அவைகளை ஒன்று சேர்த்துவிடுமாம் பிரண்டை.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182007-303759.png)
எலும்புகளின் அடர்த்தியை மீட்க உதவுகிறது பிரண்டை.. வாயுவால் எலும்பு, நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடுவதால், முதுகுத்தண்டு மற்றும் கழுத்து பகுதிக்கு அவை இறங்கி, பசை போல் அங்கேயே படிந்து வலியை உண்டாக்கிவிடும். இதனால், கழுத்தை கொஞ்சம்கூட திருப்பவோ, குனியவோ முடியாது. இதுபோன்ற தொந்தரவு இருந்தால், பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, தூளாக்கி, சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகிவிடும்.. விரைவில் முதுகு வலி மற்றும் கழுத்து வலியும் குணமாகும்
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182023-911593.png)
சுவையான பிரண்டை துவையலை எப்படி செய்வது என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். பிரண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தேவையான பொருட்கள்: 100 கிராம் பிரண்டை, மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 10 வரமிளகாய்கள், ஒன்றரை டேபிள் ஸ்பூன் உளுந்து, 50 கிராம் பூண்டு, 100 கிராம் சின்ன வெங்காயம், 2 தக்காளி, 2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள், 25 கிராம் புளி, தேங்காய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182245-424569.png)
பிரண்டையை வெட்டி எடுத்து விட்டு நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதற்குள் வரமிளகாய்கள் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், உளுந்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். இவற்றை நன்றாக தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை பொந்நிறமாக மாறி வரும் போது, வெட்டி வைத்திருந்த பிரண்டையை சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் கிளற வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182237-609965.png)
இதையடுத்து, இரண்டு தக்காளிகளை சிறிய துண்டுகளாக வெட்டி இதில் சேர்க்க வேண்டும். இதை வதக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு எள் சேர்க்க வேண்டும். இதற்கடுத்து 25 கிராம் புளியை, 100 மி.லி தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். மேலும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு துருவி வைத்திருந்த தேங்காயை ஒரு கைப்பிடி அளவு இதில் சேர்த்து வறுக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-182230-490742.png)
இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அதன்பின்னர், கடுகு, உளுந்து ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் தாளித்து துவையலில் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் பிரண்டை துவையல் தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.