ஜான்வி கபூரின் ரீசண்ட் க்ளிக்ஸ்… அம்மா ஸ்ரீ தேவியையே மிஞ்சிடுவாங்க போலயே…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தேவாரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாஃப் சாரி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் ஜான்வி கபூர். இவரும் பாலிவுட், டோலிவுட் என சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
2/7
ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்திலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவரை இன்ஸ்டாவில் மட்டும் 25.8 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் ஃபாளோ செய்கின்றனர்.
3/7
இந்திய சினிமாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இளைஞர்களை பெரிதும் கவரும் நடிகையாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
4/7
ஜான்வி கபூர் நடிப்பில் கடைசியாக வெளியான படமான தேவாரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதீத ஆதாரவு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர் நடித்தார்.
5/7
இந்தப் படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகுகிறது. இப்படத்தில் ஜான்வி கபூர் தனது திறமையான நடிப்பினை வெளிக்காட்டியது மட்டும் இல்லாமல், கவர்ச்சியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
6/7
குறிப்பாக சுட்டமல்லி பாடலுக்கு கவர்ச்சியுடன் சேர்ந்து ஜான்வி கபூரின் எக்ஸ்பிரஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisment
Advertisements
7/7
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாஃப் சாரி கட்டிக் கொண்டு பல போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.