/indian-express-tamil/media/media_files/2025/02/26/K2KZpdUUze6qROfVhVmW.jpg)
/indian-express-tamil/media/media_files/58wGNnUJpVHyQOsD2FBj.jpg)
உப்பு நமது உணவில் ஒரு முக்கிய அங்கமாகும், இது திரவ சமநிலை, நரம்பு செயல்பாடு மற்றும் தசை சுருக்கங்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான உப்புகளில், மிகவும் பொதுவானவை இளஞ்சிவப்பு ஹிமாலயன் உப்பு மற்றும் வழக்கமான வெள்ளை உப்பு. இவை இரண்டுமே உணவிற்கு சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/26/3ZbtKbegsegF10eK4wxC.jpg)
இளஞ்சிவப்பு ஹிமாலயன் உப்பு பாகிஸ்தானில் உள்ள கெவ்ரா உப்பு சுரங்கத்திலிருந்து பெறப்படுகிறது, மேலும் இது தூய்மையான உப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறுகிறது. இந்த தாதுக்கள் சிறிய அளவில் இருந்தாலும், அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் இதிலுள்ள நன்மைகள் காரணமாக பெரும்பாலானோர் இதனை பயன்படுத்துகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/ZaVSivMNiLzz8SEhCfZ7.jpg)
மறுபுறம், வெள்ளை உப்பு பொதுவாக கடல் நீர் ஆவியாதல் மூலம் நிலத்தடி உப்பு படிவுகளிலிருந்து பெறப்படுகிறது. டேபிள் உப்பு பெரும்பாலும் அயோடினுடன் செறிவூட்டப்படுகிறது, இது கோயிட்டர் போன்ற அயோடின் குறைபாடு கோளாறுகளைத் தடுக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
/indian-express-tamil/media/media_files/HpgxpCartw60WWklRzwi.jpg)
ஹிமாலயன் உப்புக்கும், வெள்ளை உப்புக்கும் இடையிலான முதன்மை வேறுபாடுகளில் ஒன்று அவற்றின் கனிம உள்ளடக்கம். இளஞ்சிவப்பு ஹிமாலயன் உப்பில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட 84 தாதுக்கள் உள்ளன. வெள்ளை உப்பில் இந்த தாதுக்கள் அதிகளவில் இல்லாத நிலையில், தைராய்டு செயல்பாட்டிற்கு அவசியமான அயோடின் சேர்க்கப்பட்டுள்ளது. அயோடின் குறைபாடு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், அயோடைஸ் செய்யப்பட்ட உப்பு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/gJwip8LxGfZdGmx6VtMJ.jpg)
வெள்ளை உப்பு ஒரு சீரான அமைப்பு மற்றும் சுவையைக் கொண்டுள்ளது, இது பேக்கிங் மற்றும் சமையலில் விருப்பமான தேர்வாக அமைகிறது. வெள்ளை உப்பில் அயோடின் இருப்பது தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் அயோடின் குறைபாடு கோளாறுகளைத் தடுக்கிறது. இது பரவலாகக் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது மற்றும் இளஞ்சிவப்பு உப்பை விட பட்ஜெட்டுக்கு ஏற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/02/26/lFFKxKrE3Z4agKn65hac.jpg)
இளஞ்சிவப்பு உப்பு மற்றும் வெள்ளை உப்பு இரண்டும் ஒரே மாதிரியான சோடியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன, அதாவது இந்த இரண்டு உப்புகளையும் அதிகப்படியாக எடுத்து கொள்வது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த இரண்டு உப்பில் நீங்கள் எதை பயன்படுத்தினாலும் மிதமான அளவில் பயன்படுத்துவது நன்மையை தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us