நமது வீடுகளில் சிறிய அளவிலேயேனும் ஒரு மூலிகை தோட்டம் அமைப்பது, ஆரோக்கியமான வாழ்விற்கு அத்தியாவசியம். நகர்ப்புறங்களில் பெரிய தோட்டம் அமைக்க இடமில்லை என்றாலும், உங்கள் பால்கனியில் உள்ள 30 சதுர அடி போன்ற சிறிய இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியாக வீடுகளில் வளர்க்க கூடிய செடிகளை பற்றி டாக்டர் சிவராமன் நலத்தின்னை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருப்பது பற்றி பார்ப்போம்.
2/5
சாதாரண தொட்டிகளில், தலா ஐந்து சதுர அடிக்கு கற்பூரவல்லி, நிலவேம்பு, நொச்சி, ஆடாதோடை, தூதுவளை, கண்டங்கத்திரி போன்ற மூலிகைகளை வளர்க்கலாம். இந்தச் செடிகள், 40 முதல் 60 நாட்களுக்கு ஒருமுறை கத்தரித்துவிட்டாலும், மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டே இருக்கும். தொட்டியில் உள்ள மண்ணை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ மாற்றினால் போதும்.
3/5
இந்த ஐந்து மூலிகைச் செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால், சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நீர் எரிச்சல் போன்ற சாதாரண உடல் உபாதைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். சளி, இருமல், காய்ச்சல்: கற்பூரவல்லி, தூதுவளை, நிலவேம்பு போன்ற மூலிகைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
Advertisment
4/5
கண்டங்கத்திரி, நொச்சி போன்ற மூலிகைகள் செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு உதவும். இவை நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
5/5
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.