/indian-express-tamil/media/media_files/2025/01/13/yd3qEoKRMaXuK7JcAdxn.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/13/xMBQ5jFLefKWGHko4KXJ.jpg)
அனைத்து காய்கறிகளையும் வைத்து இந்த குழம்பை கிராமங்களில் செய்வதுண்டு. ஒத்தபடையில் தன் காய்கறிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். அந்த சுவையை உங்க வீட்டிலும் நீங்கள் கொண்டு வரலாம். இப்படி செஞ்சி பாருங்க.
/indian-express-tamil/media/media_files/S4kBKnwTYnDOL1ANL86p.jpg)
தேவையான காய்கறிகள்
வெண்பூசணி மஞ்சள் பூசணி அவரைக்காய் பட்டர் பீன்ஸ் மொச்சை பயிறு கத்திரிக்காய் மாங்காய் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த சாம்பாருக்கு ரொம்ப முக்கியமான காய் என்னவென்றால் அந்த மஞ்சள் பூசணி தான்.
/indian-express-tamil/media/media_files/NUWx3T8Gli6y0L6ez824.jpg)
குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து ஒரு கரண்டி என்னை ஊற்றி அது சூடானதும் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு சேர்க்கவும். பின்பு சீரகம், மிளகு, வெந்தயம், ஒரு துண்டு கட்டி பெருங்காயம் சேர்க்கவும். அதன் பின் சின்ன வெங்கயும், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pgwJswcwpedZoXqpjN9x.jpg)
அடுத்தது பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். அதையடுத்து அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கிளறவும். மாங்காய் மற்றும் கடைசியாக சேர்க்க வேண்டும். இப்போது சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தண்ணி சேர்த்து குறை மூடவும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/s2JrYpj9WuQV0Msul0yU.jpg)
இப்போது வெறும் ஒரு விசில் வந்ததும் குறை திறந்து மாங்காய் சேர்க்கவும். அதை சேர்த்த பின்பு வேகா வாய்த்த துவரம் பருப்பை சேர்க்கவும். அதன் பின் கொஞ்சம் புலி சேர்த்து கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/ZakiyqLJ65ni9NfiTBtF.jpg)
கடைசியாக மல்லி சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். இப்போது இதை சாதம், இட்லி, தோசை என்று எது வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.