New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/uvkVtq7E5i1yB9Bw16Gz.jpg)
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகரின் சிறுவயது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, சில அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் இவர் நடித்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.
சினிமா பிரபலங்களின் அரிதான மற்றும் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இன்றைய தேதியில் இணையத்தில் அடிக்கடி வைரலாக பரவுகின்றன. அந்த வகையில், இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், இப்போது யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறது?
தனது திரையுலக பயணத்தை தொடங்கிய போது சாக்லேட் பாயாக அறியப்பட்ட இவர், அதன் பின்னர் அழுத்தமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்த, ரவி மோகனின் சிறுவயது புகைப்படம் தான்.
சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவி மோகன், 'ஜெயம்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர், 'எம். குமரன் S/o மகாலட்சுமி', 'உனக்கும், எனக்கும்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'பேராண்மை' திரைப்படம் மூலம் தனது தனித்துவமான நடிப்புத் திறமையை நிரூபித்தார்.
இதைத் தொடர்ந்து, 'ஆதி பகவன்', 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட படங்கள் இவரது திரைப்பயணத்தில் பெரிதும் பேசப்பட்டன. இது தவிர வரலாற்று புனைவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், முதன்மை பாத்திரத்தை இவர் ஏற்று நடித்திருந்தார்.
இப்போது, பராசக்தி திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார். இது தவிர இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.