/indian-express-tamil/media/media_files/2025/03/01/12tbbF6Av1RFCDLtARMO.jpg)
/indian-express-tamil/media/media_files/A3bX7Tb6Wx28hSQWowEk.jpg)
மோர் : புரோபயாடிக் அதிகம் நிறைந்த மோர், புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி நம் செரிமானத்திற்கு உதவுகிறது. பாரம்பரியமாக நம் வீட்டில் செய்யும் மோரை விட கடைகளில் கிடைக்கும் மோர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். மோரை பானமாக பருகலாம். அல்லது, சமையலில் புளித்த சுவை சேர்க்கவோ பயன்படுத்தலாம். மோர் குடிப்பதால் குடல் பாக்டீரியாவை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/ECsp6KHubGZy7t51iJt9.jpg)
ஊறவைக்கப்பட்ட அரிசி உணவுகள்: இட்லி, தோசை, பான்டா பாட் (பழைய சாதம்) போன்ற உணவுகளில் அதிக ஊட்டச்சத்து கொண்டுள்ளது, அவை புரோபயாடிக்குகள் நிறைந்தவை. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுவது குடலை பராமரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/heNcy0f19MbKQXXAS4Mi.jpg)
பன்னீர்: பாலாடைக்கட்டி என்றும் அழைக்கப்படும் பன்னீர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும், பன்னீரில் செரிமானத்தை ஆதரிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. நமது உணவில் பன்னீரை சேர்த்துக் கொள்வது குடல் பாக்டீரியாவை மேம்படுத்தவும், சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும் இது இதயம், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது.
/indian-express-tamil/media/media_files/pDjlAIMqidKy7pxrKLnv.jpg)
தயிர்: புரோபயாடிக் நிறைந்த தயிர், குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. தினமும் தயிரை சாப்பிடுவதால் குடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகமாகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், உடல் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/gar.jpg)
ஊறுகாய் : பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் ஆனது குடல் ஆரோக்கியம் காக்கும் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கசப்பான மற்றும் காரமான ஊறுகாய் ஆனது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/14/C0s0kpIhWSgeezMJzBKR.jpg)
பச்சை பட்டாணி: பச்சை பட்டாணியில் புரோபயாடிக் அதிகம் நிறைந்துள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உணவாக அமைகிறது. தினசரி நம் உணவில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கொண்டால் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகளைக் குறைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/xulCWXGMvhtsThCnDMe1.jpg)
ஊறவைக்கப்பட்ட காய்கறிகள்: கேரட், முள்ளங்கி மற்றும் வெள்ளரிகள் போன்ற ஊறவைக்கப்பட்ட காய்கறிகள் புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரங்களாகும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.