/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135732-2025-07-31-13-58-32.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135738-2025-07-31-13-59-14.png)
தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்டு, பச்சை பட்டாணி - 1/2 கப், பாஸ்மதி அரிசி - 1 கப், வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 (விரும்பினால்), பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, எண்ணெய் - 2 தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்), உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு (நறுக்கியது), தயிர் - 1/4 கப் (விரும்பினால்).
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135745-2025-07-31-13-59-14.png)
பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். புதினா இலைகளை சுத்தம் செய்து, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135752-2025-07-31-13-59-14.png)
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135800-2025-07-31-13-59-14.png)
அரைத்த புதினா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135808-2025-07-31-13-59-14.png)
ஊறவைத்த அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும், பச்சை பட்டாணியை சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135818-2025-07-31-13-59-14.png)
பாத்திரத்தை மூடி, தீயை குறைத்து வைத்து, அரிசி மற்றும் பட்டாணி நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-135732-2025-07-31-13-58-32.jpg)
அரிசி வெந்ததும், நெய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி, தயிர் விருப்பப்பட்டால் சேர்த்து பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.