/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-200315-2025-07-19-20-03-36.jpg)
/indian-express-tamil/media/media_files/bwsJD8KsikSdkiwJdIuu.jpg)
முள்ளங்கியில் உள்ள உயர்தர நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, மலச்சிக்கலை தவிர்க்கவும் உதவும். அதோடு முள்ளங்கி இரைப்பை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும் உதவும்.
/indian-express-tamil/media/media_files/kYVTM2G9givX4ozh6n8J.jpg)
முள்ளங்கியில் அதிக அளவில் நீரிழிவு எதிர்ப்பு குணங்கள் நிரம்பியுள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, குளுக்கோஸ் உறிஞ்சுதல் மற்றும் இன்சுலின் வினைத்திறனை அதிகரிக்கவும், வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிடுவது இரத்த சரக்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
/indian-express-tamil/media/media_files/km6jiF2JXdT9eY1XdOgt.jpg)
உடலை நீரேற்றமாக வைத்திருக்க முள்ளங்கி உதவும். 100 கிராம் முள்ளங்கியில் 93.5 கிராம் நீர்ச்சத்து உள்ளது. முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். நீரேற்றத்துக்கு மட்டுமின்றி உடலின் வெப்பநிலை கட்டுப்பாடு, சுழற்சிக்கும் உதவும். இதை வைத்து ஒரு கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-204210-2025-07-19-20-42-41.png)
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 1 கப் (நறுக்கியது), துவரம் பருப்பு - 1/4 கப், சின்ன வெங்காயம் - 5-6 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-204219-2025-07-19-20-42-41.png)
துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு, 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். முள்ளங்கியை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-200315-2025-07-19-20-03-36.jpg)
நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடிவைத்து வேக விடவும். முள்ளங்கி வெந்ததும் வேகவைத்த பருப்பு, சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.