/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170342-2025-07-10-17-03-58.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170427-2025-07-10-17-05-45.png)
1990 காலகட்டத்தில் அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் மோதல் போக்கு நிலவியது. அந்த காலம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170436-2025-07-10-17-05-45.png)
அதைத் தொடர்ந்து 1993 இல் வெளியான ‘உழைப்பாளி’ மற்றும் 1994 இல் வெளியான ‘வீரா’ ஆகிய ரஜினி படங்களின் வெளியீட்டில் அரசு தரப்பில் இருந்து மறைமுக தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்தே அரசு குறித்து ரஜினி ‘பாஷா’ வெற்றி விழாவில் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து, ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் மோதல் முற்றியது.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170441-2025-07-10-17-05-45.png)
அதன் பின்னர் ஜெயலலிதா உடன் சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள ரஜினி முயற்சி செய்தார். மனைவி லதாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து மந்திராலய பூஜை பிரசாதத்தை கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170456-2025-07-10-17-05-45.png)
ஜெயலலிதாவும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு இருவரும் நல்லுறவைப் பேணி வந்தனர். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போது அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ‘ஜெயலலிதா ஒரு தைரிய லட்சுமி’ என்று ரஜினி புகழ்ந்து பேசினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170513-2025-07-10-17-05-45.png)
அதன் பின்னர் ஜெயலலிதாவின் இறப்பு வரை ரஜினியும் ஜெயலலிதாவும் சுமூகமான நட்பை பேணி வந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு சங்கடம் ஏற்பட்டபோது ஜெயலலிதா செய்த உதவி குறித்து ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ‘பாபா’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அதிமுகவினர் சிலர் அங்கு சென்று பிரச்சனை செய்துள்ளனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ராதாரவியை அழைத்து, நம் கட்சிக்காரர்கள் பாபா ஷூட்டிங்கில் பிரச்சனை செய்கிறார்களாம். அங்கு சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள் ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-170530-2025-07-10-17-05-45.png)
தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்று ரஜினியை சந்தித்த ராதாரவி, நீங்கள் தைரியமாக ஷூட்டிங் நடத்துங்கள். என்ன நடந்தாலும் அரசாங்கம் உங்களுடன் இருக்கும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினி மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார். இந்த தகவலை ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.