/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-00-48.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-00-48.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று. இந்தப் படத்தில் இருப்பவர் பிரபல நடிகர் ராணா டகுபதி.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-12-31.jpg)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவர் தமிழ் சினிமாவில், உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-12-54.jpg)
ராணா டகுபதி தொடர்ந்து தமிழில் பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-13-22.jpg)
ராணா டகுபதி திரைப்பயணத்தில் பெரும் திருப்பத்தை கொடுத்த படம் என்றால், அது 'பாகுபலி' தான். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைத்தது.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-13-48.jpg)
ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'பாகுபலி' முதல் பாகம் படம் ரூ. 650 கோடி வரையில் வசூல் குவித்தது. இதே போன்று பாகுபலி 2 படமும் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் பாகத்திற்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் பாகுபலி 2 வெளியாகியது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்தப்படமும் ஹிட் கொடுக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/28/rana-daggubati-childhood-pics-tamil-news-2025-06-28-16-14-13.jpg)
இந்நிலையில், ராணா டகுபதியின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் ராணா செம கியூட்டாக இருக்கிறார் எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.