/indian-express-tamil/media/media_files/2025/06/12/OatD0tnCVRRYepV3HMv1.jpg)
நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/9hSDS2KmT0h96f2UeTQl.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று. இந்தப் படத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/bI5bXnbDbugOt0Xm91dh.jpg)
நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரின் சம்பளம் பொதுவாக ஒரு படத்திற்கு ரூ.4 முதல் 5 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், புஷ்பா 2 படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சாவா படத்திற்காக, அவர் ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/h54CWF0j4ZuUUCU2YZrM.jpg)
நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/qKDZBTLEPXKoPh2AhxEH.jpg)
'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், நடிகர் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/SaAgKTjurCtyy6grTPPJ.jpg)
கடைசியாக கடந்த 14-ம் தேதி ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் சாவா. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் ராஷ்மிகா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/5lvYL1dcJqRQ4226mtZu.jpg)
கடந்த மார்ச் மாதத்தில் வெளியான 'சிக்கந்தர்' படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.