/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134757-2025-07-26-13-49-57.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134801-2025-07-26-13-50-25.png)
பப்பாளி காய் உங்களது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பப்பேன் என்ற நொதிகளைக் கொண்டிருப்பதால், செரிமானத்திற்கான இரைப்பை அமிலங்களின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாவை வெளியேற்றுவதோடு வயிற்றில் நச்சுத்தன்மை இல்லாமல் வைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134808-2025-07-26-13-50-25.png)
பப்பாளி காயில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இவற்றை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134812-2025-07-26-13-50-25.png)
பொதுவாக பப்பாளி காயில் என்சைம்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்களான பப்பைன் மற்றும் சைமோபைபன் அதிகளவில் உள்ளதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது. உடலில் புதிய செல்களை உருவாக்கி வயிற்று வீக்கம், வயிறு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதில் ஒரு அருமையான பொரியல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134818-2025-07-26-13-50-25.png)
தேவையான பொருட்கள்
பப்பாளிக்காய் நறுக்கியது ஒரு கப், சின்ன வெங்காயம் 6, தனியாத் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையானது, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன், தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134824-2025-07-26-13-50-25.png)
பப்பாளிக் காயை பிஞ்சும் இல்லாமல் ரொம்பவும் பழுத்தும் இல்லாமல் நடுத்தரமான பப்பாளிக்காயை தோல் சீவி அதனுள் இருக்கும் விதைகளையும் எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134829-2025-07-26-13-50-25.png)
வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134837-2025-07-26-13-50-25.png)
வெங்காயம் கலர் மாறியதும் பப்பாளிக்காயை அதனுடன் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கை நீர் தெளித்து கலந்து தட்டைப் போட்டு மூடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134842-2025-07-26-13-50-25.png)
அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வெந்ததும் தனியா தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-134757-2025-07-26-13-49-57.jpg)
அவ்வளவு தான்... மிகவும் ருசியான பப்பாளிக்காய் பொரியல் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.