/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163339-2025-08-26-16-35-01.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163345-2025-08-26-16-36-11.png)
தேவையான பொருட்கள்
கோழி - 1200 கிராம், கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன், காய்ந்த சிகப்பு மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கிராம்பு - 4 - 5, பச்சை ஏலக்காய் - 4 - 5, கருப்பு ஏலக்காய் - 1, பாதாம் - 10 - 15, முந்திரி - 10 - 15, பச்சை மிளகாய் - 2 - 3, பால் - 1/2 கப், பெரிய வெங்காயம் - 3, தயிர் - 1 கப், எண்ணெய் - 1/2 கப், ஃப்ரெஷ் கிரீம் - 3- 4 டீஸ்பூன், கசூரி மேத்தி - 1 டீஸ்பூன், கொத்தமல்லி இலைகள் - 2 டீஸ்பூன்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163405-2025-08-26-16-36-11.png)
முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் உப்பு, கருப்பு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163413-2025-08-26-16-36-11.png)
பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிகப்பு மிளகாய், பெருஞ்சீரகம், சீரகம், கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்த அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163421-2025-08-26-16-36-11.png)
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நல்லா பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் ஊறவைத்துள்ள கோழியை சேர்த்து கலந்து 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163429-2025-08-26-16-36-11.png)
பிறகு அதனுடன் தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 25 நிமிடங்களுக்கு மூடி வைத்து சமைக்கவும். இடை இடையே மூடியை திறந்து கோழியை நன்றாக அடிபிடிக்காமல் கிளறிவிட்டு கொள்ளவும். இதற்கிடையே மிக்ஸி ஜாரில் ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163436-2025-08-26-16-36-11.png)
தற்போது அரைத்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டை கோழியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஃப்ரெஷ் கிரீம், கசூரி மேத்தி சேர்த்து கலந்து சமைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-163339-2025-08-26-16-35-01.jpg)
கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் ருசியான 'மகாராணி சிக்கன்' ரெடி...!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.