/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-07-06.jpg)
தமிழில் 2011ம் ஆண்டு வெளியான ‘யுவன் யுவதி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் ரீமா. இப்படத்திற்கு முன்பாக, ஜீவாவின் 'கோ' படத்திலும் கவுரவ தோற்றத்தில் இவர் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-07-06.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-42-57.jpg)
இந்நிலையில், இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதில் இடம் பிடித்துள்ள சிறுமி யார் என்பதை பலராலும் கண்டுபிடிக்க முடிந்திருக்காது. இப்படத்தில் இருப்பவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரீமா கல்லிங்கல்.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-46-41.jpg)
தமிழில் 2011ம் ஆண்டு வெளியான ‘யுவன் யுவதி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் ரீமா. இப்படத்திற்கு முன்பாக, ஜீவாவின் 'கோ' படத்திலும் கவுரவ தோற்றத்தில் இவர் நடித்திருந்தார். எனினும், அடுத்தடுத்து அவர் பெரிய அளவில் தமிழில் நடிக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-52-00.jpg)
ரீமா 2009 ஆம் ஆண்டு ரீத்து எனும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர். மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்ற வைரஸ் திரைப்படத்தை இவர் நடித்து, தயாரித்திருந்தார்
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-53-52.jpg)
இவர் கடந்த 2013 ஆண்டு நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை ஆஷிக் அபு இயக்கினார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் பூத்தது. இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-54-26.jpg)
நடிகை ரீமா கல்லிங்கல், கடந்த 2017 ஆம் ஆண்டில், 60 வயது ஹீரோவுக்கு 20 வயது நடிகையை ஜோடியாக போடுகிறார்களே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது. மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான சர்ச்சை எழுந்த போது, மற்ற நடிகர்களை போல ரீமா கல்லிங்கலும் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/19/rima-kallingal-actress-childhood-photos-tamil-news-2025-06-19-15-56-01.jpg)
தற்போது நடனம், வெப் சீரிஸ், படங்கள் என்று ரீமா பிசியாகி இருக்கிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.