'கங்கனா ரனாவத் ஆஃப் ஸ்போர்ட்ஸ்'... நீரஜ் சோப்ரா பற்றிய பேச்சுக்கு கலாய்த்த நெட்டிசன்கள்; பதிலடி கொடுத்த சாய்னா நேவால்
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தியாவுக்காக பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை சாய்னா நேவால். அவர் லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
2/7
சாய்னாவின் இந்த கருத்து, நேர்மையாக இருந்தாலும், இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை 'கங்கனா ரனாவத் ஆஃப் ஸ்போர்ட்ஸ்' என்கிற அடைமொழியக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தனர்.
3/7
இந்நிலையில், நெட்டிசன்கள் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சாய்னா, வீட்டில் உட்கார்ந்து கருத்து தெரிவிப்பது மிகவும் எளிதானது. ஆனால், ஒரு விளையாட்டை ஆடி, நாட்டிற்காக பதக்கம் வெல்வது கடினமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
4/7
"பாராட்டுக்கு நன்றி. 'கங்கனா' எனக் குறிப்பிட்டுள்ளது அழகாக இருக்கிறது. ஆனால் நான் எனது விளையாட்டில் கச்சிதமாக இருக்க வேண்டும். உலக நம்பர் 1 மற்றும் பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கத்தை என் நாட்டிற்கு பெற்றுத்தந்தேன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். வீட்டில் உட்கார்ந்து கருத்து சொல்வது எளிதானது, ஆனால் விளையாட்டை ஆடுவது எளிதானது அல்ல" என்று சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.
5/7
முன்னதாக, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் கூறியிருந்தார்.
6/7
அதற்கு, "ஜஸ்ப்ரித் பும்ரா 150 கிலோமீட்டர் வேக ஸ்பான்சர் பந்தை சாய்னாவின் தலைக்கு நேராக வீசும் போது அவர் எங்கே செல்வார் என்பதை பார்ப்போம்" என்று ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அதனை நீக்கிய அவர் முதிர்ச்சியின்றி அப்படி பதிவிட்டதாக சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.
7/7
அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்த சாய்னா நேவால், "முதலில் நான் ஏன் பும்ராவை எதிர்கொள்ளப் போகிறேன். 8 வருடம் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தால் பும்ராவின் பந்துகளுக்கு நான் பதிலளித்திருப்பேன். ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா பேட்மிண்டன் விளையாட வந்தால் அவர் என்னுடைய இறகு பந்து அடியை தாங்க மாட்டார். எனவே இது போன்ற விஷயங்களுக்காக நமது நாட்டுக்குள் நாமே சண்டை போடக்கூடாது." என்று அவர் கூறினார்

Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.