/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162232-2025-07-23-16-23-01.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162104-2025-07-23-16-23-24.png)
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியை தழுவும்போது, புதுமுகங்கள் நடிப்பில் சைலண்டான வெளியாக இந்திப் படம் ஒன்று வசூலில் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162113-2025-07-23-16-23-24.png)
காதல் படங்களுக்கு பெயர் போனது பாலிவுட் திரையுலகம். அழுத்தமான காதல் கதைகளுக்காக பார்வையாளர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தார்கள். ஆனால் இன்று பாலிவுட்டில் கன்டென்ட் வறட்சியுடன் நல்ல காதல் படங்களுக்கான வறட்சியும் ஒருங்கே இணைந்துவிட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162122-2025-07-23-16-23-24.png)
அந்த இடத்தை பூர்த்தி செய்யும் படங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. காதல் படங்களுக்கு பெயர் போன யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுங்கள் நடிக்க புது முக இசையமைப்பாளர்களால் உருவான படம் ‘சயாரா’.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162132-2025-07-23-16-23-24.png)
மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தின் மூலமாக தான் அறிமுகமாகிறார்கள். இப்படத்தினை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162139-2025-07-23-16-23-24.png)
இந்தப் படம் வெளியான முதல் நாள் 20.75 கோடியை வசூலித்தது. 2-வது நாளில் 23.50 கோடி என வசூலித்தது. இந்த வசூல் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. "சயாரா" திரைப்படம் BookMyShow இல் ஒரு வலுவான தொடக்கத்தைக் கண்டுள்ளது, 3.5 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன . குறிப்பாக, கடைசி ஒரு மணி நேரத்தில் 33,110 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக BookMyShow கூறுகிறது . இந்தப் படம் தற்போது அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகளுடன் டிரெண்டிங்கில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162207-2025-07-23-16-23-24.png)
படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் எந்தவித முன்னணி நடிகர்களும் இல்லாமல் புதுமுக நடிகர்களை கொண்ட இந்தப் படம் இதுவரை ரூ.150 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162214-2025-07-23-16-23-24.png)
ஒரு மணிநேரத்திற்கு 40,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் தொடர்ச்சியாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்றால் கண்டிப்பாக ‘சயாரா’ திரைப்படம் 200 கோடி வசூலை எளிதாக கடக்கும் என்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-162225-2025-07-23-16-23-24.png)
இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டில் இப்படம் பெரும் வசூல் செய்து வருகிறது. இந்த ஆண்டு ‘சாவா’ படத்துக்குப் பிறகு 200 கோடி வசூலை கடக்கும் 2-வது படமாக இது அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.