/indian-express-tamil/media/media_files/2025/06/03/hvSxqKTwAKhn2KCG0aYF.jpg)
நடிகை சமந்தா தயாரிப்பில் வெளியான "சுபம்" படத்தின் ஓ.டி.டி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/gzJJwoj9LUfBssJwJudL.jpg)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளம்பும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/T0N6THMvv7mCRIGSxAnx.jpg)
இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/F2ECuGNIvgUDBmDQQY8v.jpg)
பிரவீன் காந்த்ரேகுலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். சமந்தா தயாரித்த முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் கடந்த மே 9-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/nA4U1rmGaphrqR45eZxM.jpg)
'சுபம்' படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/quYACQTVgLc7a7oNftlF.jpg)
இந்தப் படத்தில் நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/yOWLUHKpUZKnS498sKDZ.jpg)
இந்த நிலையில், 'சுபம்' படத்தின் ஓ.டி.டி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆ ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.