/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-30-11.jpg)
பின்னணிப் பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் பன்முகம் கொண்ட சஞ்சய் தத் 29 ஜூலை 1959 பிறந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-36-02.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-38-36.jpg)
பின்னணிப் பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் பன்முகம் கொண்ட சஞ்சய் தத் 29 ஜூலை 1959 பிறந்தார். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-43-52.jpg)
சஞ்சய் தத் பிரபல தயாரிப்பாளரான சுனில் தத் மகன் ஆவார். அவரது தயார் நர்கிசு தத் பிரபல நடிகை ஆவார். 1981 ஆம் ஆண்டு தனது தாயார் நர்கீஸின் நோய் மற்றும் மரணத்தைத் தொடர்ந்து சஞ்சய் தத் மிகவும் இக்கட்டான கட்டத்தில் இருந்தார். அவரது முதல் படமான ராக்கி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது தாயாரின் மரணம் சஞ்சய் தத்தை மிகவும் பாதித்தது. அவர் போதைப்பொருள் உட்கொள்ளவும் வழிவகுத்தது.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-42-27.jpg)
கடந்த 19 ஏப்ரல் 1993 அன்று, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (தடா) கீழ் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் அவர் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-45-54.jpg)
கடந்த 16 டிசம்பர் 2008 ஆம் ஆண்டு, சஞ்சய் தத் ஊட்டச்சத்துக் குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-48-42.jpg)
இந்தியில் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. ராக்கி (1981) நாம் (1986), சாஜன் (1991), சதக் (1991), கல்நாயக் (1993), வாஸ்தவ்: தி ரியாலிட்டி (1999), முன்னா பாய் எம்.பி.பி.எஸ். (2003), லகே ரஹோ முன்னா பாய் (2006), அக்னீபத் (2012), கே.ஜி.எஃப்: பார்ட் 2 (2022), சஞ்சு (2018) உள்ளிட்ட பெரும் வரவேற்பை பெற்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/21/sanjay-dutt-shares-childhood-photos-tamil-news-2025-06-21-18-49-22.jpg)
தற்போது அவர் தென்னிந்திய சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சஞ்சய் தத். விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.