/indian-express-tamil/media/media_files/2025/06/22/silk-smitha-and-sridevi-2025-06-22-12-33-39.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/22/madhubala-and-pratyusha-2025-06-22-12-34-24.jpg)
சினிமா நட்சத்திர உலகத்தில் நடந்த சில துயர சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. கோடிகள் புரளும் படங்களில் நடித்தவர்கள் முதல், தனித்துவமான திறமைசாலிகள் வரை, அவர்களின் திடீர் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய சினிமா மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஏழு இந்திய நடிகைகளின் துயர மரணங்களின் பட்டியல் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/silk-smitha-2025-06-22-12-33-53.jpg)
சில்க் ஸ்மிதா: 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'வண்டிச்சக்கரம்' தமிழ்த் திரைப்படத்தில் "சில்க்" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. தமிழ்த் திரையுலகிலும், மலையாள படங்களிலும் பிரபலமான நடிகையாக இவர் விளங்கினார். இவர் தனது 35-வது வயதில், செப்டம்பர் 24, 1996 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/parveen-babi-2025-06-22-12-34-57.jpg)
பர்வீன் பாபி: இந்திய சினிமாவின் முக்கிய நடிகையான பர்வீன் பாபி, தனது கடைசி ஆண்டுகளை தனிமையிலும், மௌனத்திலும் கழித்தபடியே மரணமடைந்தார். மேற்கத்திய தோற்றத்திற்கும், போஹிமியன் பாணிக்கும் பெயர் பெற்ற பாபி, 1976 இல் டைம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நட்சத்திரம் ஆவார். எந்த உயர் நட்சத்திர அந்தஸ்துக்கான இறுதி சடங்குகளும், நாடகத்தனமான பிரியாவிடைகளும் அவருக்கு இல்லை. அவர், செய்தித்தாள்களை எடுக்காததை அண்டை வீட்டார்கள் கவனித்த பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வரை அவரது மரணம் ஒரு ஆழமான மர்மமாகவே உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/sridevi-2025-06-22-12-35-26.jpg)
ஸ்ரீதேவி: புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி கபூர், பிப்ரவரி 24, 2018 அன்று, தனது 54 வயதில், துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் குளியலறையில் நீரில் மூழ்கி இறந்தார். ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருந்தபோது, தனது ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் அவர் காணப்பட்டார். ஆரம்ப அறிக்கைகள் மாரடைப்பு என்று குறிப்பிட்டாலும், குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/jiah-khan-2025-06-22-12-35-39.jpg)
ஜியா கான்: 2007 ஆம் ஆண்டு 'நிஷப்த்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜியா கான். பின்னர் அமீர் கானின் 'கஜினி' மற்றும் அக்ஷய் குமாரின் 'ஹவுஸ்ஃபுல்' போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தார். இதுவே அவரது கடைசி படமாகும். நியூயார்க் நகரில் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த அவர், லண்டனில் வளர்ந்து கல்வி பயின்றார். இவர் ஜூன் 3, 2013 அன்று மும்பையின் ஜூஹூவில் உள்ள தனது இல்லத்தில் இறந்து கிடந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/pratyusha-banerjee-2025-06-22-12-35-57.jpg)
பிரத்யுஷா பானர்ஜி: பிரபலமான தொலைக்காட்சி நடிகை பிரத்யுஷா பானர்ஜி, 'பாலிகா வது' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தனித்துவமான நடிப்பால் அறியப்பட்டார். இவர் ஏப்ரல் 1, 2016 அன்று, மேற்கு புறநகர்ப் பகுதியான கோரேகாவ்னில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/madhubala-2025-06-22-12-36-19.jpg)
மதுபாலா: நடிகை மதுபாலா தனது அழகாலும், நடிப்பாலும் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்தார். இருபதுகளின் முற்பகுதியிலேயே அவருக்கு இதய நோய் கண்டறியப்பட்டது. அப்போது மருத்துவ வசதி குறைவாகவே இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் மதுபாலா அடிக்கடி மயங்கி விழுந்தார், மேலும் கடுமையான வலியுடன் பணியாற்றினார். பிப்ரவரி 23, 1969 அன்று, அவர் தனது 36 வயதில் காலமானார். 'இந்தியாவின் மர்லின் மன்றோ' என்று அறியப்பட்ட அவரது மரணம் நாட்டை உலுக்கியது.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/divya-bharti-2025-06-22-12-36-41.jpg)
திவ்யா பாரதி: பிரபலமான நடிகை திவ்யா பாரதி, ஏப்ரல் 5, 1993 அன்று மும்பை, வெர்சோவாவில் உள்ள தனது ஐந்தாவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து இறந்தார். திவ்யா பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றினார். அவரது நடிப்புத் திறமை மற்றும் அழகுக்காக அறியப்பட்ட அவர், தனது காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.