கொழுப்பு குறைவான இறைச்சிகள், மீன், முட்டை, பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ்கள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட சமநிலையான உணவை போதுமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி, வான்கோழி, டோஃபு, கெட்டியான கிரேக்க தயிர், பயறு வகைகள், கொண்டைக்கடலை, குயினோவா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உயர்தர புரதத்தை கொண்டுள்ளன. மேலும் புரோட்டீன் பவுடர்களில் இல்லாத வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இதன் மூலம் பெற முடியும்