மக்கானாவானது லோ கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டிருந்தாலும், இவற்றை அதிக அளவில் சாப்பிடுவது திடீரென ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் மக்கானாவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸானது இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இதனால் சரியான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகி விடும்.