/indian-express-tamil/media/media_files/2025/08/01/heart-attack-2x-2025-08-01-14-52-51.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/26/VIOI3NhV0REF9LkiPE64.jpg)
இதயப் பிரச்சனைகள் என்றாலே மார்பைப் பிடித்துக் கொண்டு, அருகில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்வதைதான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கார்டியாக் அரெஸ்ட்? இது பெரும்பாலும் உங்களுக்கு எந்த எச்சரிக்கையையும் தருவதில்லை.
/indian-express-tamil/media/media_files/aIbP8LifQ1nSBlEENACt.jpg)
கார்டியாக் அரெஸ்ட் என்பது மாரடைப்பு போன்றது அல்ல. இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. நீங்கள் அந்த சமயத்தில் வலியிருந்தாலும், விழிப்புடன் இருக்கலாம். உதவி பெற நேரம் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/s9fs5jpbLqB7BcBvbN2l.jpg)
மறுபுறம், கார்டியாக் அரெஸ்ட் என்பது, உங்கள் இதயத்தின் தாளம் சீராக இல்லாமல் போகும் பிரச்சனை. பெரும்பாலும் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் எனப்படும் ஒரு நிலை காரணமாக உங்கள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/BzqijOml0kMWRNV5zrn6.jpg)
இதனால் மூளை, நுரையீரல் அல்லது உங்கள் உடலின் எந்தப் பகுதியையும் ஆக்ஸிஜன் அடையாது. இதன் காரணமாக அந்த நபர் மயங்கி விழுந்து, சுவாசிப்பதை நிறுத்துவார். சில நிமிடங்களுக்குள் CPR மற்றும் டிஃபிபிரிலேட்டர் கொடுக்கப்படாவிட்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் வேகமாகக் குறையும். இங்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
/indian-express-tamil/media/media_files/JVtGy3RDI72COXfgWbrL.jpg)
மூச்சுத் திணறல் (ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்), தீவிர சோர்வு, முதுகுவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, மார்பு வலி, முக்கியமாக ஆஞ்சினா (பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்), கடினமாக உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ அல்லது உங்கள் படுத்திருக்கும்போதோ கொள்ளும்போது தொடர்ச்சியான தலைச்சுற்றல் அல்லது மயக்கம், இதயம் வேகமாக துடிப்பது, படபடப்பது அல்லது துடிப்பதைத் நிறுத்துவது போன்ற உணர்வு.
/indian-express-tamil/media/media_files/jrsF0ksLGhNzQDmiZAl2.jpg)
நீங்கள் இள வயதாக அல்லது ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், இவை அனைத்தும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்து செல்லும் அறிகுறிகள் அல்ல, பெண்களுக்கு குமட்டல், முதுகுவலி அல்லது தீவிர சோர்வு போன்ற தெளிவற்ற அறிகுறிகள் கூட இருக்கும். மேலும் பலர் இவற்றை மன அழுத்தம், வாயு அல்லது "சோர்வாக இருப்பது" என்று புறக்கணிக்கப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/ki4kdYmaI8OFIBUwNJqH.jpg)
கார்டியாக் அரெஸ்ட் பற்றிய மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயங்களில் ஒன்று, அது பாகுபாடு காட்டாது என்பதுதான். இதய நோய், அரித்மியா அல்லது இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றாலும், இளம் விளையாட்டு வீரர் விளையாட்டின் போது மயங்கி விழுவதைப் பற்றியும் நடுத்தர வயது நபர் ஜிம்மில் திடீரென கீழே விழுவதைப் பற்றியும் அல்லது தூக்கத்தில் இறந்து போவதைப் பற்றியும் நிச்சியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/EJG69XVspZ5CO3L5hhc9.jpg)
வயது காரணியும் இதற்குக் காரணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள், அதிகரித்து வரும் மன அழுத்தம், மோசமான தூக்கம் மற்றும் கண்டறியப்படாத சுகாதார நிலைமைகள் காரணமாக 30 மற்றும் 40 வயதுடையவர்களிடையே கூட மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இள வயதினர் அறிகுறிகளை கவனிக்கப்படாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.