தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீர் கொண்டது. 1 டீஸ்பூன் தேனில் 64 கலோரிகள் உள்ளன. தேன் பலவகைகளில் உண்டு. மனுகா தேன், பக்வீட் தேன் வைல்ட் ஃப்ளவர், அல்ஃபாஃபா, ப்ளூபெர்ரி, ஆரஞ்சு ப்ளாஸ்ஸம், க்ளோவர் என்று பலவகைகளில் உண்டு. இவற்றில் மனுகா தேன் தான் சிறந்த தேன் என்று சொல்லப்படுகிறது. தேன் உடல் ஆரோக்கியம் போன்றே சருமம், கூந்தல் போன்றவற்றுக்கும் அதி நன்மைகளை செய்கிறது.