/indian-express-tamil/media/media_files/2025/06/02/x1gqNe2rhVld5EHjLFvw.jpg)
Sour idli batter home hacks
/indian-express-tamil/media/media_files/2025/06/02/sMszJlbEEUQ9HaoU1YZz.jpg)
நம்மில் பலரும் இட்லி மாவு புளித்துவிட்டால், அதை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், புளித்த இட்லி மாவை தூக்கிப் போடாமல், சில சுவாரசியமான வீட்டு உபயோகங்களுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதனுடன், அன்றாட வாழ்வில் உதவும் மேலும் சில எளிய வீட்டு குறிப்புகளையும் இந்தப் பகுதியில் காண்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/16/fgL72FVLempnEECigLDP.jpg)
புளித்த இட்லி மாவும், ஷாம்பூவும், கோலமாவும்
உங்கள் வீட்டில் புளித்த இட்லி மாவு இருந்தால், அதை தூக்கி எறிவதற்குப் பதிலாக ஒரு கரண்டி கோலமாவு மற்றும் ஒரு ஷாம்பு பாக்கெட் (எந்த பிராண்டாக இருந்தாலும் சரி) சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இது ஒரு சிறந்த சுத்திகரிப்பானாக செயல்படும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/eC6g9zdfs5kLTHgd4Tz7.jpg)
சமையலறை சிங்க் சுத்தம் செய்ய:
பாத்திரங்கள் கழுவிய பிறகு, சமையலறை சிங்க் எண்ணெய் பிசுக்குடன் காணப்படும். இந்தக் கலவையை சிங்க் முழுவதும் தடவி, 10-15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு, ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால், சிங்குடன் ஒட்டியுள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி, புதிது போல் பளபளக்கும். பாத்திரங்களையும் இதே முறையில் சுத்தம் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/mNMNBOGo5eSuhC8xJXJT.jpg)
பாத்ரூம் குழாய்களில் படிந்த உப்பு கறையை நீக்க:
குளியலறையில் உள்ள குழாய்களில் உப்பு கறை படிவது சகஜம். இந்த கலவையை உப்பு கரைகள் படிந்த இடங்களில் தடவி, 10-15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால், உப்பு கரைகள் எளிதாக நீங்கிவிடும். குழாய்கள் பளபளப்பாக மாறும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/24/8HSG5FE1Hnf4iped1RXF.jpg)
பிளாஸ்டிக் பாத்திரங்களில் உள்ள உப்பு கரைகளை நீக்க:
ஸ்டீல் பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, பிளாஸ்டிக் வாளிகள் போன்ற பொருட்களிலும் உப்பு கரைகள் படிந்திருக்கும். அந்தக் கலவையை பிளாஸ்டிக் பொருட்களின் மீது தடவி, 10-15 நிமிடங்கள் ஊற வைத்து, இரும்பு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால், பிளாஸ்டிக் பக்கெட்டில் படிந்த உப்பு கறை சூப்பராக நீங்கி, பளிச்சென்று மாறும்.
/indian-express-tamil/media/media_files/4i1CwP098X6m2j24yCSC.jpg)
பொதுவாக தூக்கிப் போடும் இட்லி மாவு, ஷாம்பூ, மற்றும் கோல மாவு இவையெல்லாம் சேர்ந்து உங்கள் வீட்டை சுத்தம் செய்ய ஒரு அற்புதமான வழிமுறையாக மாறுகிறது. இனி புளித்த இட்லி மாவை தூக்கிப் போடாமல், இந்த எளிமையான யோசனையை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு வேலைகளை இது எவ்வளவு எளிதாக்குகிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.