அனுஷ்கா முதல் ராஷ்மிகா வரை; பெண்களை மையப்படுத்தும் ஆக்ஷன் கதையில் தென்னிந்திய நடிகைகள்!
தென்னிந்தியாவில் தற்போது பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஆக்ஷன் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சில படங்களின் பட்டியலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் தற்போது பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஆக்ஷன் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சில படங்களின் பட்டியலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆக்ஷன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆக்ஷன் படங்கள் என்றால் மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், சில முன்னணி நடிகைகள் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகின்றனர்.
2/5
இது போன்ற படங்களுக்கு முதன்மையானவராக அனுஷ்கா திகழ்கிறார். ஏற்கனவே, 'அருந்ததி', 'பாகமதி' போன்ற படங்களின் மூலம் பெண்களை மையப்படுத்திய கதைக்களத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்நிலையில், க்ரிஷ் இயக்கத்தில் 'காதி' என்ற தெலுங்கு படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். ஆக்ஷன் - க்ரைம் டிராமா பாணியில் உருவாகும் இப்படத்தில் விக்ரம் பிரபுவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
3/5
அடுத்தபடியாக, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 'மைசா' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ரவிந்திரா இயக்குகிறார். பான் இந்தியா படமாக தயாராகி வரும் இக்கதையில், மாறுபட்ட கதாபாதிரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisment
4/5
மேலும், 'தி கேர்ள்ஃபிரண்ட்' என்ற மற்றொரு படத்திலும் முதன்மையான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஃபீல்-குட் பாணியில் இப்படம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படமும் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
முன்னணி நடிகை சமந்தாவும் 'பங்காரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரத்தில் களமிறங்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமந்தாவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதன் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.