/indian-express-tamil/media/media_files/lPVJxsCcw2UBHKrdxmMt.jpg)
/indian-express-tamil/media/media_files/o05aqGxZ9WmxVwa4mKF5.jpg)
பொதுவாக தலைமுடி ஒருவருக்கு அதிகமாக கொட்டுவதற்கு மரபியல் காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், நாம் உண்ணும் ஒருசில உணவுகளும் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தில் இடையூறை ஏற்படுத்தி, முடி உதிர்வை இன்னும் அதிகமாக்கும் என்பது தெரியுமா
/indian-express-tamil/media/media_files/Xd1qGI9MfIqzwkjaRERO.jpg)
சர்க்கரை
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொண்டால், அது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுத்து, ஆன்டிரோஜன் அளவுகளை அதிகரித்து மயிர்கால்களை சுருங்கச் செய்யும். இப்படி தொடர்ந்து சர்க்கரையை அதிகம் உட்கொள்ளும் போது, மயிர்கால்கள் பலவீனமாகி, முடி உதிரத் தொடங்கி, மெலிந்து போகச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/MPO6FYwokhMn0YEX2RNR.jpg)
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளான பிரட், பாஸ்தா போன்றவற்றை அதிகம் உட்கொள்ளும் போது, அந்த கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தி, உட்காயங்களை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியம் பலவீனமாகி, மயிர்கால்களை வலுவிழக்கச் செய்து, முடி உதிர்தலை அதிகரிக்கும்.
/indian-express-tamil/media/media_files/EARPkcOXbiuFhNwIoNZ6.jpg)
வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்
எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை மயிர்கால்களில் அடைப்புக்களை ஏற்படுத்தி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக பொடுகுத் தொல்லை, அதிகப்படியான தலைமுடி உதிர்வை சந்திக்க நேரிடும்.
/indian-express-tamil/media/media_files/6kmjethe98P8bQKdlyhh.jpg)
செயற்கை இனிப்புகள்
அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்புகள் நிறைந்த உணவுகள் உடலின் மெட்டபாலிசத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதுவும் தொடர்ந்து இந்த வகையான இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது உடலின் முடி வளர்ச்சி சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தி, முடி உதிர்வை அதிகரிக்கும்.
/indian-express-tamil/media/media_files/7JPQKpep2sc2NyqUj2fb.jpg)
அதிகளவு வைட்டமின் ஏ
பொதுவாக வைட்டமின் ஏ செல்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. இந்த வைட்டமின் ஏ-வை அதிகமாக எடுக்கும் போது, அது முடி முடி நுண்குழாய்களை அதிகமாகத் தூண்டி, அவற்றை ஓய்வு நிலைக்குத் தள்ளும். இதன் மூலம் தலைமுடி கணிசமான அளவில் உதிரத் தொடங்கும். எனவே அளவுக்கு அதிகமாக வைட்டமின் ஏ-வை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/edYeNxEWLO1YlXA5BwiR.jpg)
அதிக பாதரசம் நிறைந்த மீன்
பாதரசம் அதிகம் நிறைந்த ஸ்வார்டு மீன், கிங் கானாங்கெளுத்தி போன்றமீன்களை அடிக்கடி வாங்கி உட்கொண்டால், உடலில் பாதரசத்தின் அளவு அதிகரிக்கும். இப்படி பாதரசத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது தலைமுடி உதிர்வதை அதிகரித்து, முடியை எலிவால் போன்று மெலிந்து போகச் செய்யும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.