/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-47-41.jpg)
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர் என கொண்டாடப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-47-41.jpg)
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர் என கொண்டாடப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் இயக்குநர், நடிகர், தயாரிப்பளார் என பன்முகத்தன்மை கொண்ட சுந்தர்.சி தான்.
/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-51-59.jpg)
சுந்தர். சி, முதலில் தனது சினிமா பயணத்தை உதவி இயக்குநராக தான் தொடங்கினார். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம் திரைப்படத்தில் காவலராக நடிப்பில் அறிமுகமானார். இதன்பின், 1995ம் ஆண்டு வெளியான 'முறை மாமன்' படத்திலிருந்து இயக்குநராக சினிமாவில் தன் பயணத்தைத் துவங்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-53-44.jpg)
தொடர்ந்து, 90-களின் இறுதிக்குள் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அதன்பின், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம் என தொடர்ந்து நாயகனாக நடித்து அதில் வெற்றியும் பெற்றார். நகரம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல பாராட்டுகளையும் பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-56-00.jpg)
இதற்கிடையே, திரைப்படங்களையும் இயக்கி வந்த சுந்தர் சி, 2000-க்குப் பின் வின்னர், கிரி, அன்பே சிவம், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார். குறிப்பாக, அரண்மனை என்கிற பேய் படத்தின் 4-ஆம் பாகம் வரை இயக்கி வசூல் ரீதியாகவும் அவற்றை வெற்றிப்படங்களாக மாற்றினார். தற்போது, நயன்தாரா நாயகியாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் - 2 படத்தை இயக்கி வருகிறார். அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-15-00-47.jpg)
சுந்தர்.சி நடிகை குஷ்பை மார்ச் 9, 2000 அன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சுந்தர்.சி-யின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.