/indian-express-tamil/media/media_files/HCnFgXB5Fylo3FLE81h7.jpg)
Useful Daily life Tips
/indian-express-tamil/media/media_files/4i1CwP098X6m2j24yCSC.jpg)
உங்க தினசரி வாழ்க்கையை எளிமையாக்க உங்களுக்கு இதுவரை தெரியாத சில குறிப்புகள் இங்கே
/indian-express-tamil/media/media_files/2025/05/02/EdEwP12Opgzna8f934lV.jpg)
கத்தரிக்கோலைச் சுத்தம் செய்ய, கூர்மையாக்க
உங்கள் கத்தரிக்கோல் துருப்பிடித்திருந்தாலோ அல்லது வெட்டும் திறன் குறைந்திருந்தாலோ, பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்: துருப்பிடித்த கத்தரிக்கோலைச் சுத்தம் செய்ய: கத்தரிக்கோலின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி, லேசான தீயில் சில விநாடிகள் காட்டவும். பின்னர் சுத்தமான துணியால் துடைத்து எடுக்கவும். துரு நீங்கி கத்தரிக்கோல் பளபளப்பாகும். மழுங்கிய கத்தரிக்கோலை கூர்மையாக்க: கத்தரிக்கோலை வைத்து முட்டையின் ஓடுகளைத் தொடர்ந்து வெட்டுங்கள். முட்டையின் ஓடுகள் கத்தரிக்கோலின் பிளேடுகளை உரசி கூர்மையாக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/xMBQ5jFLefKWGHko4KXJ.jpg)
காய்கறி குழம்பு கெட்டுப் போகாமல் பாதுகாக்க
வெயில் காலங்களில் காய்கறி குழம்பு விரைவில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க, குழம்பில் சிறிதளவு ரசம் சேர்த்து கொதிக்க வைக்கவும். ரசத்தில் உள்ள அமிலத்தன்மை குழம்பு கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்.
/indian-express-tamil/media/media_files/MpVkEiFU4N05WYcxxEe2.jpg)
காய்கறிகளை எளிதாகத் தோல் உரிக்க
புடலங்காய், முள்ளங்கி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை மெல்லியதாகவும், விரைவாகவும் தோல் உரிக்க சிறிய குழிக்கரண்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தலாம். கரண்டியின் விளிம்பு காய்கறிகளின் தோலை மெதுவாகவும், சீராகவும் உரித்து எடுக்க உதவும். மேலும், இதே கரண்டியைப் பயன்படுத்தி புடலங்காயின் நடுவில் உள்ள விதைகளையும் எளிதாக நீக்கிவிடலாம்.
/indian-express-tamil/media/media_files/Zo1TxQ370M3uNp470Cj6.jpg)
பயறு வகைகளை விரைவாக ஊறவைக்கும் முறை
கொண்டைக்கடலை, ராஜ்மா, மொச்சைப் பயிறு சமைக்கும் போது முந்தைய நாளை ஊறவைக்க வேண்டும். அப்படி ஊறவைக்க மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்! பயறு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின்னர், அதனை குக்கரில் போட்டு மூடி, 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இந்த முறை பயறு வகைகளை விரைவாகவும், முழுமையாகவும் ஊற வைக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/1OfjARf4Zqah818mi6yq.jpg)
கூர்மையான பொருட்களைப் பாதுகாப்பாக அகற்றுவது எப்படி
கத்தி, உடைந்த கண்ணாடி போன்ற கூர்மையான பொருட்களை குப்பைத்தொட்டியில் போடும் முன், அவற்றை பழைய துணி அல்லது சானிட்டரி நாப்கின் போன்ற பாதுகாப்பான உறையில் சுற்றிப் போடவும். இது குப்பை சேகரிப்பவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு காயம் ஏற்படாமல் தடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/b47a4ZAIaxUmCJiPOpnJ.jpg)
பல்வலியை உடனடியாகக் குறைக்கும் எளிய வழி
பல்வலி ஏற்படும்போது, ஒரு சிறிய பச்சை வெங்காயத்தை எடுத்து வலிக்கும் பல்லின் மீது வைத்து மெதுவாக அழுத்தி மென்று சாப்பிடவும். வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பல்வலியை உடனடியாகக் குறைக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/HCnFgXB5Fylo3FLE81h7.jpg)
வெள்ளி கொலுசுகளை சுத்தம் செய்யும் முறை
வெள்ளி கொலுசுகள் அழுக்கடைந்து பொலிவிழந்து காணப்பட்டால், சிறிதளவு முகப்பவுடரை அதன் மீது தூவி, மென்மையான துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நன்றாகத் தேய்க்கவும். பின்னர் சுத்தமான துணியால் துடைத்து எடுத்தால், கொலுசுகள் மீண்டும் பளபளப்பாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.