New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/09/2Q5tLkljbd3CRa0k9ptl.jpg)
யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
தொடர்ந்து ஜோக்கர் என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இவர், அடுத்து சமுத்தரக்கனியுடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரு படங்களுமே ரம்யா பாண்டியனுக்கு நல்ல பாராட்டுக்களை பெற்று தந்தது.
சூர்யா தயாரிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார்.
இந்த படம் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் முகிலன் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார்.
யோகா பயிற்சியாளர் லவ்ல் தவானை காதலித்த ரம்யா பாண்டியன் அவரை இரு வீட்டார் சம்மதத்துடன் ரிஷினேஷில் திருமணம் செய்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.