/indian-express-tamil/media/media_files/joithika-nadhiya-and.jpg)
/indian-express-tamil/media/media_files/easws.jpg)
பொதுவாக சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் இல்லாமல், சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். குறிப்பாக நடிகைள் நாயகிகளாக நடித்து வந்தாலும், திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கான வாய்ப்புகள் குறைவது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி என்று சொல்வார்கள்.
/indian-express-tamil/media/media_files/simran-vas.jpg)
திருமணமாகி சினிமாவை விட்டு விலகிய நடிகைகள் சிலர் சில ஆண்டுகள் கழித்து ரீ-என்டரி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சினிமாவில் இருந்து விலகி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த சில நடிகைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/nadhiya4.jpg)
நதியா - எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
1985-ம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நதியா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 1994-ம் ஆண்டு சின்னமேடம் என்ற படத்துடன் சினிமாவை விட்டு வெளியேறினார். அதன்பிறகு 10 வருட இடைவெளிக்கு பிறகு 2004-ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/jyothika1.jpg)
ஜோதிகா - 36 வயதினிலே 2016
அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து சூர்யாவுடன், காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா நடிப்பில் இருந்து விலகிய நிலையில், 2016-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/simran-1.jpg)
சிம்ரன் - வாரணம் ஆயிரம் 2008
அஜித் மற்றும் விஜயுடன் இணைந்து நடித்த சிம்ரன் பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 2005-ம் ஆண்டுக்கு பின் திரைப்படத்தில் இருந்து விலகிய நிலையில், 2008-ம் ஆண்டு மீண்டும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்திருந்தார். சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் அந்தகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/gauthami.jpg)
கௌதமி - பாபநாசம் 2015
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌதமி, ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், 1998-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அதன்பிறகு 2015-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் பாபநாசம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/kasthuri1.jpg)
கஸ்தூரி - மலை மலை 2009
1991-ம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கஸ்தூரி, அடுத்து ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், 2001-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பில் இருந்து விலகினார். அதன்பிறகு 2009-ம் ஆண்டு பிரபு அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/laila-1.jpg)
லைலா - சர்தார் 2018
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான லைலா, அஜித், சூர்யா, உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், 2006-ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகினார். அதன்பிறகு கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கார்த்தியின் சர்தார் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். தற்போது வெளியாகியுள்ள கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/sitara-act.jpg)
சித்தாரா - மத்தாப்பு 2013
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சித்தாரா, புதுவசந்தம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், 2000-ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நிலையில், 2013-ம் ஆண்டு மத்தாப்பு என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/eawars.jpg)
ஈஸ்வரி ராவ் - காலா 2018
1990-ம் ஆண்டு கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஈஸ்வரி ராவ், தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் அவரது அக்காவாக நடித்திருந்தார். 2005-ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகிய ஈஸ்வரி ராவ், 2018-ம் ஆண்டு ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.