New Update
/indian-express-tamil/media/media_files/juQANJMAtMtFQF3EPat8.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு வெளியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருந்தார்.
தி பேமிலி மேன் 2 சீரிஸ் மூலம் இந்தியில் நடித்த சமந்தா, அந்த வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
இடையில் ஒரு வகையான தோல் நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சமந்தா நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.
தனது சமூகவலைளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சமந்தா சில சமயங்களில் மருத்துவ குறிப்புகளும் வெளியிடுவது வழக்கம்
தற்போது, வென்னிற உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.