New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/01/karthi-childhood-2025-07-01-15-06-57.jpg)
இன்றைய தமிழ் சினிமா சூழலில், ஏராளமான ஹிட் திரைப்படங்கள் கொடுத்த சகோதரர்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள், சமூக ஊடகத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இச்சிறுவர்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களை பார்த்திருப்போம். ஆனால், சகோதரர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில், குழந்தைப் பருவத்தில் இருக்கும் இவர்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
இவர்கள் வேறு யாருமில்லை; சூர்யா மற்றும் கார்த்தியின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. வெவ்வேறு காலங்களில் சினிமா உலகிற்கு வந்திருந்தாலும், இவர்கள் இருவருமே இப்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள்.
'நேருக்கு நேர்' திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சூர்யா. அதன் பின்னர், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான 'நந்தா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது.
மறுபுறம், தாம் அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலமாக முதல் படத்திலேயே கார்த்திக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர், 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'நான் மகான் அல்ல' போன்று அவர் நடித்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இப்படி, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் திரைத்துறையில் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கின்றனர். இது தவிர 'அகரம்' அறக்கட்டளை மூலம் எத்தனையோ மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்வதன் மூலம் பலரது உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.