/indian-express-tamil/media/media_files/2025/08/08/sivaji-and-kannadasan-2025-08-08-13-27-08.jpg)
/indian-express-tamil/media/media_files/0leDkyqFDIsmSDFu5t8C.jpg)
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவியரசர் கண்ணதாசன் இருவருக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டு, பிரிந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஒரு பாடல் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/JAyGf6aIBlOUsC43k0Tq.jpg)
தி.மு.கவில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தபோது, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, அப்போது கண்ணதாசன் தெனாலி ராமன் படத்தில் தெனாளி ராமன் குழியில் இருப்பது போன்று சிவாஜி கணேசன் ஒரு குழியில், படத்தை போட்டு இது தான் சிவாஜியின் எதிர்காலம் என்று கண்ணதாசர் எழுதிவிடுகிறார். அதை பார்த்தவுடன்தான் சிவாஜிக்கு கோபம் வந்துவிடுகிறது.
/indian-express-tamil/media/media_files/kRU2D7bEhvLqkoNPlxoC.jpg)
ஒரு நாள் வாகினி ஸ்டுடியோல சிவாஜி நடித்து கொண்டிருக்கிறார். கண்ணதாசன் வந்திருக்கார் என்று சொன்னவுடன் டேய் கண்ணதாசா நில். என்று சிவாஜி கணேசன் அவரை தாக்க துரத்துகிறார், கண்ணதாசன் பக்கத்து ஸ்டுடியோக்கு போய்விடுகிறார். அவரை துரத்து உள்ளே சென்ற சிவாஜியை அங்கிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் தடுத்து, ஏய் என்னடா நடக்குது என்னடா நடக்குது என்று சிவாஜி விஷயத்தை அவரிடம் சொல்லி இருக்கிறார்,
/indian-express-tamil/media/media_files/WalSUp0JF7NehRhoKMGQ.jpg)
இதை கேட்ட என்.எஸ்.கிருஷ்ணன், ஏதோ சொல்லிருக்கார். சரி விடு அவன் எழுதினால் அப்படி நடந்துவிட போவது இல்லை. நீ போ. என்று சொல்லி சிவாஜி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு கண்ணதாசரை சத்தம் போட்டிருக்கார். நீ அரசியலிலும் இருக்கிறாய் சினிமாவிலும் இருக்கிறாய். ஆனால் அது வெளியே காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இங்கே இல்லை. சினிமா உலகம் என்று வேறு. நீ எதற்கு சிவாஜி பகித்துக்கொள்ளுகிறாய் என்று அவர் கண்ணதாசனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/SqyG7wgb2rqsh9UfFMw0.jpg)
அந்த காலகட்டத்திற்கு பிறகு சிவாஜி படங்களுக்கு கண்ணதாசனை அழைப்பதில்லை. ஆனால் கண்ணதாசன் எனக்கு எழுதக்கூடாது என்று சிவாஜியும் சொல்லவில்லை. பகப்பிரிவினை சமயத்தில் பட்டுக்கோட்டை மரணமடைந்ததால், அடுத்தது என்ன செய்வது? இங்கே கண்ணதாசன் தான் இருக்கிறார். அந்த நேரத்தில் பாசமலர் படம் தயாரிக்கப்படுகிறது. சிவாஜியிடம் சொல்லாமலேயே சிவாஜி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் பாசமலர் படத்தின் எல்லா பாடல்களையும் கண்ணதாசன் எழுதுகிறார். பாடல் பதிவாகி சிவாஜியின் வீட்டுக்கு போகிறது.
/indian-express-tamil/media/media_files/lQZ941ROjsfDFzGhZcjs.jpg)
சிவாஜி பாசமலர் பாடலை முதன்முதலாக கேட்கிறார். அப்போதும் அவரும் கண்ணதாசனும் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ இல்லை. அந்த மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்று பாடலை கேட்கக் கேட்க அப்படியே சிவாஜியின் கண்கணிடிருந்து கண்ணீர் வழிந்துள்ளது. உடனயடிகாக கண்ணதாசனுக்கு போனு போடுங்கயா. என்று கூறியுள்ளர். நான் உன்னை உடனே பார்க்கணும் என்று சிவாஜி சொல்ல,. நானே வருகிறேன் என்று சொல்லி கண்ணதாசன் சிவாஜி வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/AxqAzzIkm0RPen86fuET.jpg)
சிவாஜி வீட்டிற்குள் கண்ணதாசன் நுழைந்தவுடன் சிவாஜி சோபாவிலிருந்து எழுந்து ஓடி வந்து கண்ணதாசரை கட்டிப்பிடித்திருக்கார். நீ சரஸ்வதி, நீ சரஸ்வதி, நீ தான் கவிஞன், நீ கவிஞன். இனிமேல் என் எல்லா படத்துக்கும் நீ தான் எழுதுனும் என்று அந்த இடத்தில் இரண்டுவரும் கதறி கதறி அழுதுள்ளனர். இரண்டு இமயங்களும் சேர்ந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.