தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் வைகை புயல் வடிவேலு. இவரின் காமேடி காட்சிகள், காமெடி வசனங்கள் இன்று பிரபலமான மீம்ஸ்களாக வந்து கொண்டு இருக்கிறது.
2/9
பல முன்னணி நடிகர்கர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ள வடிவேலு, சத்யராஜ், பார்த்திபன் ஆகியோருடன் நடித்த காட்சிகள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
3/9
அதேபோல் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர், லண்டன், உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவின் காமெடி அசத்தலாக இருக்கும்.
Advertisment
4/9
குறிப்பாக சுந்தர்.சி நடித்த தலைநகரம், நகரம் உள்ளிட்ட படங்களில் சுந்தர்.சி வடிவேலு கூட்டணி பெரிய வரவேற்பை பெற்று காமெடியில் அசத்தியிருப்பார்கள்.
5/9
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வடிவேலு – சுந்தர்.சி இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதில் வடிவேலு பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கினார்.
6/9
சுந்தர்.சி, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு, ஆகிய காமெடி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து தனது படங்களை இயக்கி வந்தார்.
Advertisment
Advertisement
7/9
அரண்மனை 4 படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் சுந்தர்.சி – வடிவேலு காம்போ இணைந்துள்ளது.
8/9
இன்று வடிவேலு பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
9/9
கேங்கர்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், வடிவேலு சுந்தர்.சி இருவரும் முறைத்துக்கொள்வது போல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பதிவுகள் வரவேற்பை பெற்று வருகிறது.