/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-505843236-612x612-1-2025-07-17-15-47-55.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-154830-2025-07-17-15-48-55.png)
மகாபலிபுரம், தமிழ்நாடு
மகாபலிபுரம், பாறையில் செதுக்கப்பட்ட கோயில்கள் மற்றும் சிற்பங்களுக்குப் பிரபலமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். மாமல்லபுரம் (Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3][4] 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-154953-2025-07-17-15-50-42.png)
திருமலை நாயக்கர் அரண்மனை, தமிழ்நாடு
திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-155205-2025-07-17-15-52-16.png)
மீனாட்சி அம்மன் கோயில், தமிழ்நாடு
மீனாட்சி அம்மன் கோயில், தமிழ்நாடு மாநிலம், மதுரையில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற இந்து ஆலயமாகும். இது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த கோயில், மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்று மற்றும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகும்
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-161650-2025-07-17-16-17-02.png)
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-161723-2025-07-17-16-17-34.png)
விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், தமிழ்நாடு
விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், கன்னியாகுமரியில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும். இது கடலில் உள்ள ஒரு பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. இது சுவாமி விவேகானந்தர் நினைவாக கட்டப்பட்டது மற்றும் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.