New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/22/H6fhogGx36AKq25o6INP.jpg)
சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவரின் ரீசன்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்தவர் லிவிங்ஸ்டன்.
தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா.
சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமானவர், தற்போது அருவி சீரியலில் அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் அருவி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஜோவிதா அடுத்து ஜீ தமிழின் மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகர் அசோக் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் சமீபத்தில் தொடங்கிய நிலையில், தொடக்க எபிசோடுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது அவர் க்ளாமராக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.