New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/16/raveena-dhans.jpg)
சீரியல் நடிகையும் கடந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான ரவீனா நான் உன் வெளிச்சப் பூ என்ற பதிவுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.
2009—ம் ஆண்டு சன்டிவியின் தங்கம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா தாஹா, 2017-ம் ஆண்டு ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார்.
பூஜை, ஜில்லா ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், புலி படத்தின் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
ராட்சசன், எனிமி ஆகிய படங்களில் நடித்திருந்த ரவீனா தாஹா, கடைசியாக, 2023-ம் ஆண்டு வெளியான பீட்சா 3 படத்தில் நடித்திருந்தார்.
சினிமா சீரியல் என மாறி மாறி நடித்திருந்தாலும், ரவீனாவுக்கு திருப்புமுனை கொடுத்தது மௌனராகம் சீரியல் தான்.
அதன்பிறகு குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 7 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற ரவீனா, வேறமாறி ஆபீஸ் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது, நான் என் வெளிச்சப் பூ என்ற பெயரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.