/indian-express-tamil/media/media_files/bxoqMGPigtVs4IHDPzeV.jpg)
Top 10 Tamil Serial
/indian-express-tamil/media/media_files/3Osf0QIr26nVwgymL8fz.jpg)
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது சீரியல்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமே இந்த சீரியல்கள் தான். இதை நன்றாக தெரிந்துகொண்ட டிவி சேனல்கள் நாளுக்கு நாள் புதிய சீரியல்களை களமிறங்கி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/ASNi25u2DetfYEruu8eF.jpg)
மேலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்கள் தற்போது 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே இந்த வாரத்தில் தமிழ் சீரியல்கள் பெற்ற டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/kayal-serial.jpg)
கயல்
ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வரும் கயல் சீரியல், தன்னை சுற்றி நடக்கும் சதியை நாயகி எவ்வாறு முறியடிக்கிறார் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் 8.83 டி.ஆர்.பி புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/singapes.jpg)
சிங்கப்பெண்ணே
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் குடும்ப சூழ்நிலைக்காக கம்பெனியில் வேலை செய்து வரும் நாயகி தன்னுடன் இருக்கும் பெண்களுடன் இணைந்து பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதை. 8.49 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த சீரியல் 2-வது இடத்தில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/DJNi9lpomDu4A62L8W5W.jpg)
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில், அம்மாவுக்கு பிடிக்காத மகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 8.22 புள்ளிகள் பெற்றுள்ள சிறகடிக்க ஆசை 3–வது இடத்தில் உள்ளது,
/indian-express-tamil/media/media_files/jLPW0zKZVzzgNjU0EWol.jpg)
மூன்று முடிச்சு
சன்டிவியில் புதிதாக தொடங்கியுள்ள மூன்று முடிச்சு சீரியலில் ஈரமான ரோஜாவே புகழ் சுவாதி கொண்டே நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் 8.11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/marumagal.jpg)
மருமகள்
கேப்ரியல்லா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல், 7.77 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/New-Project-5-1.jpg)
சுந்தரி
சனடிவியின் சுந்தரி சீரியல், 7.14 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/nVaxwxzB1DA3B01jFZAB.jpg)
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டாலும், 6.75 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது,
/indian-express-tamil/media/media_files/MglEqoPx3V5wH1KGvRCB.jpg)
மல்லி
சன்டிவியின் மல்லி சீரியல் 6.64 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்துள்ளது,
/indian-express-tamil/media/media_files/Ru8olcbprnyrwrDzORJc.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், 6.51 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/chinnamarumagal.jpg)
சின்ன மருமகள்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 6.35 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.