விக்ரவாண்டியில் என்ன நிலைமை...? மாநாட்டுக்கு குவிந்த மக்கள்!
விக்ரவாண்டியில் மாநாட்டுக்காக குவிந்த தொண்டர்கள் கூட்டம். வெயிலின் தாக்கத்தால் நாற்காலியை குடையாக மாற்றிய தொண்டர்கள் கூட்டம். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க மக்கள் அலைமோதினர்.
விக்ரவாண்டியில் மாநாட்டுக்காக குவிந்த தொண்டர்கள் கூட்டம். வெயிலின் தாக்கத்தால் நாற்காலியை குடையாக மாற்றிய தொண்டர்கள் கூட்டம். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க மக்கள் அலைமோதினர்.
விஜயின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் கு விந்துள்ளனர்.
2/7
அதிகளவு வெயில், குடிநீர் வசதி பற்றாக்குறையால் ஆங்காங்கே சிலர் மயக்கம் போட்டு வருகிறார்கள். இதனால் மாநாட்டை ஒரு மணி நேரம் முன் கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
3/7
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது.
Advertisment
4/7
இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். விஜயின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
5/7
அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விஜயின் அரசியல் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர். விஜய் கட்சியின் கொள்கை என்ன, அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6/7
இன்று காலையிலேயே மாநாட்டு அரங்கம் பாதிக்கு மேல் நிரம்பிவிட்டது. பல தொண்டர்கள் நேற்று இரவே விக்கிரவாண்டி வந்து தங்கியுள்ளனர்.
Advertisment
Advertisements
7/7
மாநாட்டு பணிகளை விஜய் நேற்று இரவு சென்று பார்வையிட்டார். முதல் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news