35 ஆண்டுகளாக பலசரக்கு கடைக்குள் நுழைந்து வெல்லம், பொட்டுக்கடலையை மட்டும் சுவைத்து செல்லும் கோவில் மாடுகள்,இதனால் வியாபாரம் செழித்து வளர்ந்துள்ளதாக கடை உரிமையாளர் நெகிழ்ச்சி.
2/7
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 35 ஆண்டுகளாக மாசிலாமணி என்பவர் பல சரக்கு கடையை நடத்தி வருகிறார். இவர் காலையில் கடையை திறந்தவுடன் கோயில் பசுமாடுகள் கடைக்குள் நுழைந்து விடுகின்றன.
3/7
இந்த மாடுகள் கடைக்குள் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தாமல் வெல்லம் பொட்டுக்கடலையை சுவைத்து மகிழ்ந்து செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
Advertisment
4/7
முன்னர் சிறு கன்று குட்டியாக இருந்த இந்த பசு மாடு தற்போது கன்று குட்டியே ஈன்று அதனுடன் கடைக்குள் நுழைந்து தனக்குத் தேவையானவற்றை சுவைத்து செல்கிறது. அன்றாட நிகழ்வாக நடைபெறும் இந்நிகழ்ச்சி உள்ளூர் மக்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருக்கிறது.
5/7
இந்த நிகழ்வை புதிதாக காண்பவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கோயில் மாடு என்பதால் அதனை யாரும் எந்த தொந்தரவும் செய்வது கிடையாது. அது கடைக்குள் நுழைந்து பிற பொருட்களை சேதப்படுத்தாமல் சென்று விடுவதால் யாருக்கும் எந்த ஒரு அச்ச உணர்வும் ஏற்படுவது கிடையாது.
6/7
மேலும் தங்கள் கடைக்கு வருவதால் வியாபாரம் செழித்து வளர்ந்து தற்போது நல்ல நிலையில் உள்ளதாக வியாபாரி மாசிலாமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது ஒரு புறம் இருந்தாலும் கால்நடை வாய் வைத்ததை விற்பனை செய்யக்கூடாது என்றும்,
Advertisment
Advertisements
7/7
கால்நடைகளுக்கு என்று தனியாக உணவை வைத்து விட்டால் விற்பனைக்கு வைக்கக்கூடிய பொருட்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் எனவும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்