/indian-express-tamil/media/media_files/2024/11/05/ulg6dkxX6MKc1pjw3qAB.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/22/JoCZl4xLpLzKZl74PBQt.jpg)
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - ½ கப், கடலை மாவு - 1 கப், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத் தூள் - ¼ டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை (மொறுமொறுப்புக்கு), வாழைக்காய் - 1, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/jI6V3CKEoyH6zH46CQ1i.jpg)
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/04/nvF8j2w3KZOGjnVQtJ72.jpg)
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான கரைசல் போல் கலக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். வாழைக்காயை தோலுரித்து, பஜ்ஜிக்கு போடும் அளவுக்கு மெல்லியதாக வட்டமாக நறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-165731-2025-09-01-16-58-20.png)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வாழைக்காயை மாவில் நன்கு முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-165752-2025-09-01-16-58-20.png)
மறுபுறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-165804-2025-09-01-16-58-20.png)
மொறுமொறுப்பான டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி தயார். இதை சட்னியுடன் பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.