/indian-express-tamil/media/media_files/plC0FPZ8ppyWHogHwNJn.jpg)
TET exam 2025
/indian-express-tamil/media/media_files/2025/07/12/school-tn-2025-07-12-16-31-56.jpg)
ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்குத் தகுதியாக, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) டெட் (TET) தேர்வை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல், நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனம் இந்தத் தேர்வின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/09/15/supreme-court-3-2025-09-15-17-46-56.jpg)
சமீபத்தில், டெட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/media_files/377by2RpxD5pOQfyuNpJ.jpg)
ஏற்கனவே, தமிழக அரசு 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. முதலில் விண்ணப்பத்தின் கடைசி நாள் செப்டம்பர் 8 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின் பலர் விண்ணப்பிக்க முற்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/09/12/istockphoto-1098342050-612x612-2025-09-12-14-09-14.jpg)
விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 4,80,123 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாள் தேர்வு நவம்பர் 15ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 16ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
/indian-express-tamil/media/media_files/PSyy1XrkWRQq9A3p4T1y.jpg)
தேர்வர்கள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், விண்ணப்பித்துள்ளவர்களில் ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களும் அடக்கம் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக, அரசுப் பணியில் இருப்பவர்கள் உயர்கல்வி அல்லது பிற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற வேண்டும். இதனால், டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், தங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தடையில்லாச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/WBKXsTeWSErKXsbJnG39.jpg)
ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி, டெட் தேர்வெழுத ஆசிரியர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/v23laWkv66TDS6RJ4C8K.jpg)
இந்த அறிவிப்பு, டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இல்லாததால், அவர்கள் இனி முழு கவனத்தையும் தேர்வுக்குத் தயாராவதில் செலுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.