/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-174611-2025-08-20-17-46-25.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222810-2025-07-14-22-28-27.png)
‘தலைவன் தலைவி’ திரைப்படம், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான வெற்றிப் படங்களில் முக்கியமாக திகழ்கிறது. விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்த இந்த படம், பாண்டிராஜ் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி, ஜூலை 25 அன்று வெளியானது. குடும்பரசிக்கத்தக்க கதையம்சம் கொண்ட இதற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பு வரவேற்பு கிடைத்தது.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-174709-2025-08-20-17-47-18.png)
'தலைவன் தலைவி' ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து, திருமணத்துக்குப் பிறகு உறவுகளில் ஏற்படும் சவால்களைச் சுவாரஸ்யமாக சொல்லியமைக்காக பாராட்டு பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-174754-2025-08-20-17-48-32.png)
'மாரீசன்' திரைப்படம், வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் அதே நாளில் வெளியானாலும், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. 'தலைவன் தலைவி' மற்றும் 'மாரீசன்' திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியானதைப் போலவே, இப்போது ஓடிடி தளங்களிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-140905-2025-07-09-14-09-22.jpg)
ஆகஸ்ட் 22ஆம் தேதி, ‘தலைவன் தலைவி’ அமேசான் பிரைம்-ல், ‘மாரீசன்’ நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகவுள்ளது. தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த இரண்டு படங்களும், தென் இந்தியா மட்டுமன்றி வட இந்தியாவில் கூட நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-174812-2025-08-20-17-49-18.png)
திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘தலைவன் தலைவி’ ஓடிடியில் குடும்ப பார்வையாளர்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாரீசன்’க்கு ஓடிடி புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.