/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 1-1ea518af.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 2-56670edc.jpg)
பாம்பு வகைகளிலேயே மிகவும் பெரியதாக பலரும் கருதுவது ராஜ நாகத்தை தான். அடர்ந்த காடுகளில் காணப்படும் இந்த பாம்பு வகை, அவ்வப்போது எதிர்பாராத விதமாக குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 1-1ea518af.jpg)
ஆனால், ராஜ நாகம் என்பது ஓர் இனம் இல்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, European Journal of Taxonomy என்ற இதழில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலின் படி, ராஜ நாகம் என்பது ஓர் இனம் இல்லை என்றும், நான்கு தனித்தனி இனங்கள் எனவும் தெரிய வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 3-425328ad.jpg)
குறிப்பாக லைஃப் சயின்ஸ் அறிக்கையின்படி, ராஜநாகத்தின் முழுமையான டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அதன் மரபணு ஆய்வில் 4 தனித்துவமான இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 4-34f0ab7b.png)
153 மாதிரிகளில் செதில்கள், நிறம், பல் அமைப்பு, உடல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதில், ராஜ நாகம் ஓர் இனமாக இல்லாமல், நான்கு இனங்களின் வகைகளைக் கொண்டுள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/18/King cobra 5-b46c39f2.jpg)
இந்த ஆய்வில் வடக்கு கிங் கோப்ரா, சுண்டா கிங் கோப்ரா, மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரச நாகப்பாம்பு, லூசன் கிங் கோப்ரா ஆகிய பாம்பு வகைகளின் இனங்கள் இதில் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.