/indian-express-tamil/media/media_files/2025/04/05/Oz8Yty5kB0BjNbGVTPF8.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/05/9TY6xwWQGu3LpI45Lrgg.jpg)
முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 3 கப் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு சப்பாத்தி மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/Easy-Vegetable-Chapathi-Veg-Chapati.jpg)
மாவை கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும். எந்த அளவிற்கு மாவை பிசைந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். எனவே சப்பாத்திக்கான மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்துகொள்ளவும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/chapathi.jpg)
இப்படியாக நன்றாக பிசைந்து வைத்துள்ள மாவை 20 நிமிடங்களுக்கு தனியாக மூடி வைத்த பிறகு, மாவை உருண்டைகளாக பிடித்து, கோதுமை மாவு தடவி சப்பாத்திகளை உருட்டிக்கொள்ளவும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/chapathi-recipe-tamil-news.jpg)
சப்பாத்தியை வித்தியாசமான வடிவில் நன்றாக தேய்த்த பின்னர், தொடர்ந்து கல்லை அல்லது பேன் சூடு செய்து ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/Nzm7PT2ck5FhGGz1kVSh.jpg)
கல்லில் முதலில் சப்பாத்தியை இட்டு, சிறிது நேரம் சூடானதும் அடுத்தப்பக்கம் பிரட்டவும். அந்த பக்கத்தின் மீது எண்ணெய் தடவி மீண்டும் அடுத்தப்பக்கம் திருப்பவும். இப்படி செய்யும் போது சப்பாத்தி பொன்னிறமாக உப்பி வரும். இது சப்பாத்தி சாஃப்ட் ஆக இருக்க அதிகம் உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/EkfVMXz22D8ydLNyvbTi.jpg)
இப்போது நீங்கள் எதிர்பாத்த சாஃப்ட் லேயர் சப்பாத்தி தயார். இவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.