/indian-express-tamil/media/media_files/2025/05/19/qOD3UmoEtpeVlEneiwQO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/02/sCF6qYkrCabhBBXQYa2c.jpg)
இன்றைய சூழலில் அனைவருமே தங்களது வீடுகளில் உள்ள தோட்டம் அல்லது மாடி தோட்டங்களில் நமது மனதிற்கு மிகவும் பிடித்த இந்த மல்லிகை பூச்செடியை அனைவருமே தங்களது வீடுகளில் வளர்க்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/GPEfVJkWnpGRbVDQrHSg.png)
பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/7VbHQPO6YCmvLFhqwTfU.jpg)
மல்லிகை பூ அதிகமாக பூப்பதற்கு இயற்கையான முறையிலேயே உரம் தயாரிக்க முடியும். இதற்கான கரைசலை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கலாம். இதனால் பெரிய அளவில் செலவும் ஏற்படாது.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/kL3JttAYHCT5SG1xr1zK.jpg)
வீட்டில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு அதன் தோலை குப்பையில் தான் பெரும்பாலும் போடுவோம். ஆனால், இந்த கரைசல் செய்வதற்கு மூலப்பொருளே எலுமிச்சை தோல் தான். அதனால், சுமார் 4 அல்லது 5 எலுமிச்சை தோலை சேகரித்துக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/o7f2MbWHxTFjLq6oq5o4.jpg)
எலுமிச்சை பழத்தில் சாறு பிழிந்துவிட்டு மீதமுள்ள தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/16/7fZET7JTJLxz2NYxQ9pY.jpg)
அதனை ஒரு பாட்டிலில் தண்ணீர் சேர்த்து நறுக்கிய எலுமிச்சை துண்டுகளை அதில் சேர்த்து 3 நாட்கள் நிழலில் ஊரவைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/28/zPsLbVs9uDAs5LfdKNH3.jpg)
3 நாட்களுக்குப் பிறகு அதனை வடிகட்டி எடுத்து மற்றோரு பாட்டில் சேகரித்து அதனுடன் 2 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து (1:2 விகிதத்தில்) ஸ்பிரே பாட்டிலில் சேகரித்து வைக்க வேண்டும். இதனை மல்லிகை பூச்செடிகளில் தெளிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/21/TkGbWITkaru76cJPkVf6.jpg)
இதனால், மல்லிகை செடி வளர்ச்சி அதிகரித்து பூக்கள் பூத்து குலுங்கும். பூச்சித் தொலை கட்டுப்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.