/indian-express-tamil/media/media_files/zfjCQ25uHrUifRCcw8rs.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/23/sMFglsnWKJW9AMM49QFj.jpg)
கொய்யா பழம் உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு பழம், இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/2C2vS0505ZP9KBQyrBPW.jpg)
வாழைப்பழம், பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழம், இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்ச்த்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன, இதனால் செரிமானம், தசை வலுவு, மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றுக்கு உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/QuSYNEi0bKcXgJi1ZHmR.png)
இலந்தைப்பழம் பல நன்மைகளை கொண்டது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, தூக்கமின்மையை போக்க உதவுகிறது, மேலும் முடி மற்றும் சருமத்திற்கு நல்லது.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/bfKkEOekfNQPHkrkQvNw.jpg)
அத்திப்பழம் சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமான ஆற்றலை அளிக்கிறது. இது ஒரு நபரின் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/jamun-health-benefits.jpg)
நாவல் பழம் பல நன்மைகளைக் கொண்டது. நீரிழிவு நோய், இதயம், சருமம், வாய் ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க இது உதவுகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/14HaQtCeJ7ziT7VJ3pRs.jpg)
வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/fc2CXx4ApatgxeQNCwUR.jpg)
பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
எலுமிச்சையில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது, சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், தோல் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் எலுமிச்சை நல்லது.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/AOHlEUcgND1wWDlgKZc8.jpg)
நெல்லிக்காய் (Amla) பலவிதமான உடல்நலப் பலன்களைக் கொண்டது. இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துதல், சருமம் மற்றும் முடி ஆரோக்கியம், செரிமானத்துக்கு உதவும், ரத்தசர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தற்காப்பு ஆகியவை கிடைக்கின்றன.
/indian-express-tamil/media/media_files/PHHCT3wB9z4IYel1iHJA.jpg)
பேரிக்காய் பல ஊட்டச்சத்துக்களாலும், வைட்டமின்களாலும், தாதுக்களாலும் நிரம்பி, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம், இதயத்தையும் பாதுகாக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.