சர்வதேச கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரராக வலம் வரும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 216 ஆட்டங்களில் 133 கோல்கள் அடித்து, ஆடவர் கால்பந்தில் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு கால்பந்து நட்சத்திரமும், அர்ஜென்டினாவுக்கு ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற கொடுத்த கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி 112 சர்வதேச கோல்களை அடித்து, இந்தப் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில், ஈரானின் முன்னாள் கால்பந்து வீரர் அலி டேய் 109 கோல்களுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி 94 கோல்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
ஜாம்பியாவின் காட்ஃப்ரே சிட்டால் மற்றும் பிரேசிலிய கால்பந்து நட்சத்திரமான நெய்மர் தலா 79 கோல்களை அடித்து பட்டியலில் 9 மற்றும் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்கள். ஆனால், காட்ஃப்ரே சிட்டால் குறைந்த போட்டிகளில் 79 கோல்களை அடித்துள்ளதால் அவர் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ரேங்க் - பிளேயர் - நாடு - கோல்கள் - போட்டிகள்
1 கிறிஸ்டியானோ ரொனால்டோ - போர்ச்சுகல் -133 - 216 2 லியோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா - 112 - 189 3 அலி டேய் - ஈரான் 108 - 148 4 சுனில் சேத்ரி - இந்தியா 94 - 151 5 மொக்தார் தஹாரி - மலேசியா - 89 - 142 6 அலி மப்கவுட் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 85 114 6 ரொமேலு லுகாகு - பெல்ஜியம் - 85 - 119 8 ஃபெரெங்க் புஸ்காஸ் - ஹங்கேரி - 84 - 85 8 ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி - போலந்து - 84 - 156 10 காட்ஃப்ரே சிட்டாலு - ஜாம்பியா - 79 - 111 10 நெய்மர் பிரேசில் - 79 - 128.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.